வாட்ஸ் அப்பில் லீக் ஆன 10, 12 ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்
திருவண்ணாமலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளது. அதன்படி, 12-ஆம் வகுப்பிற்கான நாளை கணித பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளது.
அதுபோல, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.