'free fire' விளையாட்டுக்கு அடிமையான மகனை திட்டிய தாய் - கடைசியில் நிகழ்ந்த விபரீதம்
சென்னையில் free fire விளையாட்டிற்கு அடிமையானதை தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்துார் லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மீனா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து 15 வயது மகன் சுரேஷூடன் வசித்து வந்தார். மீனா வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வரும் நிலையில் சுரேஷ் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே சுரேஷூக்கு கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக வாங்கி தந்த மொபைல் போனில் free fire விளையாட்டை எந்நேரமும் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவனுக்கு படிப்பில் ஆர்வம் குறைய மீனா கடந்த 4 நாட்களாக மகனிடம் பேசாமல் இருந்துள்ளார்.
சுரேஷ் எவ்வளவோ சொல்லியும் மீனா மனம் இறங்கவில்லை. இதனையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை வீ்ட்டின் எதிரே உள்ள பழைய வீட்டில் சுரேஷ் தாயின் புடவையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வழக்கம்போல் வேலைக்கு சென்று திரும்பிய மீனா மகனை காணாமல் தேடிய நிலையில் சுரேஷ் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த ராயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.