10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகித விவரங்கள் இதோ..
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழ்நாடு முழுவதும் 9,10,024 மாணவர்கள், 28,827 தனித்தேர்வர்கள் மற்றும் 235 சிறை கைதிகள் என மொத்தம் 9,39,086 பேர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்.
தற்போது, பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதில் மாணவிகள் 94.53 சதவீதமும், மாணவர்கள் 88.58 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்ச்சி விகிதம்
வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் 5.95 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge.tn.gov.in மற்றும் https://results.digilocker.gov.in என்ற இணையதளங்களில் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் மாணவர்கள் அளித்துள்ள மொபைல் எண்களுக்கு தேர்தல் முடிவுகள் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.