தமிழை தவறவிட்ட மாணவர்கள்: 10 ஆம் வகுப்பு தேர்வில் எத்தனை பேர் சதம்?

By Irumporai May 19, 2023 05:02 AM GMT
Report

தமிழ்நாட்டில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தேர்வு முடிவுகள் 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. 

தமிழை தவறவிட்ட மாணவர்கள்: 10 ஆம் வகுப்பு தேர்வில் எத்தனை பேர் சதம்? | 10Th Exam Result 2023 Scorer Tn Sslc Result

அதன்படி, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட உள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கும், 11ஆம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியாகிறது. மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்ச்சி சதவிகிதம்

இந்த நிலையில் திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 9,14,,320 பேர் தேர்வு எழுதிய நிலையில் 4,04,904 மாணவர்களும், 4,30,710 மாணவியர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர் பாடங்கள் வாரியாக முழு மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் விவரம்

தமிழ் - யாருமில்லை

ஆங்கிலம் - 89 பேர்

கணிதம் - 3649 பேர்

அறிவியல் - 3584 பேர்

சமூக அறிவியல் - 320 பேர்