திருமணம் செய்வதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்
கேரளாவில் திருமணம் செய்வதாக கூறி 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு ஆன்லைனில் படிக்க பெற்றோர் மொபைல் போன் வாங்கி கொடுத்துள்ளனர். இதில் வாட்ஸ்அப் குழு மூலம் சிறுமியிடம் அறிமுகம் ஆன கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர் நீண்ட நாட்களாக சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பேசி பழகி வந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி கேரளாவில் உள்ள சிறுமியின் பெற்றோர்கள் வெளியே சென்றதை சிறுமி மூலம் தெரிந்து கொண்ட விஷ்ணு அந்த நேரம் பார்த்து சிறுமியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து சிறுமியை இளைஞர் விஷ்ணு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அடுத்த சில நாட்களில் விஷ்ணுவின் நடத்தையில் சந்தேகமடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் கிளிமானூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று விஷ்ணு மீது புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் விஷ்ணுவை கைது செய்து சிறையிலடைத்தனர்.