10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடக்கம் - 9.76 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
Tamil nadu
Government of Tamil Nadu
Anbil Mahesh Poyyamozhi
By Thahir
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-ஹ வகுப்புக்கும் நேற்றுடன் தேர்வு முடிவடைந்தது.
இந்த நிலையில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்க உள்ளது. இந்த தேர்வினை 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
12,639 பள்ளிகளிலும், 4,025 மையங்களிலும்,182 தனியார் மையங்களிலும் தேர்வு நடக்க உள்ளது.
சிறைக்கைதிகள் 264 பேரும், மாற்றுதிறனாளி மாணவர்கள் 13,151 பேரும் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகளை அரசு தேர்வுத்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது.