10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Tamil nadu
By Nandhini Jun 21, 2022 08:25 AM GMT
Report

10-12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு நேற்று (திங்கட்கிழமை) வெளியானது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார். இதில் 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்தடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் , 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் இடம் பெற்றது.

10, 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் | 10Th 12Th Exam Result

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

இந்நிலையில், 10ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளி அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக சான்றிதழ்களை பெற்றக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29-ம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.