12ம் வகுப்பு ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கூட இல்லாமல், வறுமையில் சாதித்து காட்டிய ஆயிஷா
10-12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய சுமார் 16 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளின் தேர்வு முடிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவை வெளியிட்டார்.
இதில் 12ம் வகுப்பு - 93.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு - 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி 97.22 சதவீதத்தடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தப்படியாக 97.15 சதவீதத்துடன் பெரம்பலூர் மாவட்டமும் , 95.96 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் உள்ளதாக தகவல் வெளியானிது.
தமிழக முதலமைச்சர் வாழ்த்து
10ம், 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன்! தேர்ச்சி பெறாதவர்கள், மனம் தளர வேண்டாம்! அடுத்த முயற்சியில் தேர்வு பெறுங்கள்! உங்களுக்கான வெற்றி காத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
வறுமையில் சாதித்த ஆயிஷா
சென்னை, வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி பள்ளி மாணவி ஆயிஷா சித்திக், ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் கூட இல்லாமல், ஆசிரியர்களின் குறிப்பு மட்டுமே வைத்து படித்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 580 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார்.
இது குறித்து ஆயிஷாவின் பெற்றோர் கூறுகையில், என் மகள் மேற்படிப்புக்கு அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.