அப்புறம் பசங்களா 'ஆரம்பிக்கலாங்களா?' - 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியீடு
10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வெளியிடுகிறார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்காமல் இருந்தது இந்த் ஆண்டு கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா உச்சத்தில் இருந்த போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 10,11 மற்றும் 12 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என கூறப்படுகிறது.