10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் - தேர்வுத்துறை உத்தரவு

10 10th-11th--12th-class-general-examination cctv-must-match தேர்வுத்துறை 11 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் சிசிடிவி
By Nandhini Apr 07, 2022 04:04 AM GMT
Report

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும். சிசிடிவி கேமரா செயல்படுவதுடன் காவலரும் மையத்தில் பணியில் இருக்க வேண்டும்.

வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களை 2 பூட்டுகள் கொண்டு பூட்டியிருக்க வேண்டும்.

பொதுத்தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரை கண்காணிப்பாளராக்க கூடாது.

பொதுத்தேர்வு பணியில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையே தேர்வுப்பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் சிசிடிவி பொருத்த வேண்டும் - தேர்வுத்துறை உத்தரவு | 10Th 11Th 12Th Class General Examination Cctv