போர் பதற்றம் எதிரொலி.., நாமக்கலில் ஒரு கோடி முட்டைகள் தேக்கம்

Egg Namakkal Iran-Israel War
By Yashini Mar 04, 2026 05:49 AM GMT
Report

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையால் சர்வதேச விமான சேவைகள் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளன.

போர் பதற்றம் எதிரொலி.., நாமக்கலில் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் | 10M Eggs Are Stranded In Namakkal Due To Export

இந்நிலையில், ஏற்றுமதி தடைப்பட்டதால் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன.

வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டிய முட்டைகள் தற்போது குடோன்களில் கையிருப்பாக உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் முட்டைகள் முக்கிய வருமானமாக இருந்தன. ஆனால் போர் பதற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

முட்டைகள் அதிகமாக தேங்கியுள்ளதால் உள்ளூர் சந்தையில் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.

போர் பதற்றம் எதிரொலி.., நாமக்கலில் ஒரு கோடி முட்டைகள் தேக்கம் | 10M Eggs Are Stranded In Namakkal Due To Export

இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகின்றனர்.

ஏற்றுமதி தாமதமானால் முட்டைகளின் தரம் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஏற்றுமதியாளர்கள் கவலைப்படுகின்றன.

இந்நிலையில், போர் பதற்றம் குறைந்து நிலைமை சீரானால் மட்டுமே ஏற்றுமதி இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.