கோடை வெயில்: இதுவரை 109 பேர் பலி

Maharashtra
By Fathima Apr 29, 2026 06:13 AM GMT
Report

கோடை வெயிலின் தீவிரம் காரணமாக மகாராஷ்டிராவில் இதுவரை 109 பேர் பலியாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது, இதனால் மக்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதாவது, மார்ச் 1 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் வெப்ப தாக்கத்தினால் இதுவரை 39 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இதுவரை 109 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கோடை வெயில்: இதுவரை 109 பேர் பலி | 109 Dead In Maharastra Summer Season

மும்பை போன்ற நகராட்சி பகுதிகளில் நேரடி வெப்பத்தாக்க பாதிப்புகள் இல்லை என்றாலும் வெப்பம் சார்ந்த இதர உடல்நலக்குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 3.34 லட்சத்திற்கும் அதிகமானோர் வெப்பம் தொடர்பான உபாதைகளுக்காக சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், ORS பாக்கெட்டுகள் மற்றும் குளிர்ந்த குடிநீர் வசதிகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கோடை வெயில்: இதுவரை 109 பேர் பலி | 109 Dead In Maharastra Summer Season