106 வயது பாட்டிக்கு பிறந்தநாள் - தலையில் கிரீடம் வைத்து ராணி போல கொண்டாடிய குடும்பத்தினர்
கோவை மாவட்டம் அருகே மூதாட்டியின் 106வது பிறந்தநாளை குடும்பத்தினர் கிடா வெட்டி கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
106 வயது பாட்டிக்கு பிறந்தநாள் விழா
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் என்று தொடங்கிய வாரிசு, தற்போது 5வது தலைமுறையை கண்டுள்ளார்.
இந்நிலையில், 1917ம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாளின் 106வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாட குடும்பத்தினர் முடிவெடுத்தனர்.
இதனையடுத்து, உறவினர்கள், நண்பர்கள், வீட்டு அக்கம், பக்கத்தினரை இவ்விழாவிற்கு வரவழைத்துள்ளனர்.
மூதாட்டியின் பிறந்தநாளுக்கு புது உடை உடுத்தி, சந்தன மாலை அணிவித்து, தலையில் கிரீடம் வைத்து , மூதாட்டிக்கு பாத பூஜை செய்து அவரிடம் அனைவரும் ஆசீர்வாதம் பெற்றனர்.
விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி அனைவருக்கும் விருந்து கொடுத்தனர். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் மூதாட்டி கிருஷ்ணம்மாளிடம் ஆசீர்வாதம் பெற்று சென்றனர்.