தமிழகத்தில் கொரோனாவால் 105 மருத்துவர்கள் மரணம்
தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் 105 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளதாக இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது.
இதில் கொரோனாவின் முதலாவது அலையில் 91 மருத்துவர்களும் கொரோனாவின் இரண்டாவது அலையில் 14 மருத்துவர்களும் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவிலேயே பீகாரில் அதிகபட்சமாக 134 மருத்துவர்கள் உயிரழந்துள்ளனர். முதல் அலையில் 38 மருத்துவர்களும் இரண்டாம் அலையில் 96 மருத்துவர்களும் உயிரழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக டெல்லியில் 123 மருத்துவர்கள் உயிரழந்துள்ளனர். முதலாம் அலையில் 23 மருத்துவர்களும் இரண்டாம் அலையில் 100 மருத்துவர்களும் உயிரழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.