100-ஆவது டெஸ்ட் விக்கெட்டை நோக்கி காத்திருக்கும் பும்ரா - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

test match 100th bumra waiting wicket
By Anupriyamkumaresan Aug 23, 2021 08:50 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், லார்ட்ஸில் நடைபெற்ற 2ஆவது டெஸ்டில் இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது.

100-ஆவது டெஸ்ட் விக்கெட்டை நோக்கி காத்திருக்கும் பும்ரா - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | 100Th Test Match Bumra Waiting For Wicket

இந்தப் போட்டியில் பும்ரா - ஷமி ஆகியோரின் பேட்டிங், பவுலிங் சிறப்பாக இருந்தது. இதனால் லீட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கும் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இதுவரை 22 டெஸ்ட் போட்டிகளில் 95 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 25 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் பும்ரா 100 விக்கெட்டுகளை எடுத்துவிட்டால், குறைந்த டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற சாதனையை பும்ரா பெறுவார். பும்ரா ஏற்கெனவே மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத் சாதனைகளை முறியடித்துவிட்டு கபில் தேவின் ரெக்கார்டை உடைக்க காத்திருக்கிறார். 

100-ஆவது டெஸ்ட் விக்கெட்டை நோக்கி காத்திருக்கும் பும்ரா - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | 100Th Test Match Bumra Waiting For Wicket

இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டையும் வீழ்த்தினார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார் பும்ரா. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளை சேர்த்து மொத்தம் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.