10 ஆயிரம் பேருக்கு வேலை - பெண்களுக்கு மட்டுமே: ஓலா அசத்தல் அறிவிப்பு
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேவையை தொடங்கியிருக்கும் ஓலா நிறுவனம் 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் ஓலா கார் மற்றும் ஆட்டோ சேவை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஆயிரக் கணக்கானோர் தினமும் ஓலாவில் பயணிக்கின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கான ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பை ஓலாவின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் வெளியிட்டிருக்கிறார்.
அதாவது கார், ஆட்டோக்களை போல எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சேவையை தொடங்க உள்ளதாகவும் அதில் பெண்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆத்மநிர்பார் பாரத் திட்டத்திற்கு பெண்கள் தேவைப்படுகிறார்கள். ஓலா ஃப்யூச்சர் தொழிற்சாலை பெண்களால் நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
முழுக்க முழுக்கப் பெண்களால் நடத்தப்படும் இந்த தொழிற்சாலை உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை ஆக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், 10 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களது குடும்பம் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையும் மேம்படுத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
The future is female! ? https://t.co/aOrnGyBZW9
— Ola Electric (@OlaElectric) September 13, 2021