தங்க புதையல்... உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக சீனா

China Gold
By Fathima Mar 30, 2025 06:26 AM GMT
Report

சீனாவில் மீண்டும் தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான செய்தி உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்பம், ஆராய்ச்சி என பல துறைகளில் சாதனை படைத்து வருகிறது சீனா.

அதுமட்டுமல்லாது தங்க இருப்பு குறித்தான ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் 1000 டன் தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்க புதையல்... உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக சீனா | 1000 Ton Gold Mine Found In China 

மத்திய மற்றும் வடகிழக்கு சீனாவில் இரண்டு தங்க புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 1000 டன் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதன் சந்தை மதிப்பு மட்டும் 83 பில்லியன் டொலராக இருக்குமாம், இத்தகவல் மட்டும் உண்மையானால் உலகின் மிகப்பெரிய பணக்கார நாடாக சீனா மாறும் என்பதே சந்தேகமில்லை.