இந்த ரேசன் கார்டு இருந்தால் மட்டுமே மாதந்தோறும் ரூ.1000 கிடைக்கும் - உங்களிடம் இருக்கிறதா? என பாருங்கள்

M K Stalin Government of Tamil Nadu DMK
By Thahir Mar 10, 2023 10:46 AM GMT
Report

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து திமுக 2021 ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது.

குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம் 

இந்த நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை இம்மாதம் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என இடைத்தேர்தல் பரப்புரையில் அறிவித்து இருந்தார்.

இந்த உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1000 per month only if you have this ration card

குடும்ப தலைவிகளுக்கு மட்டும் தான் இந்த உரிமைத்தொகையா? அல்லது அனைத்து பெண்களும் இதை பெறலாமா? என்பது குறித்து பொதுமக்கள் இடையே கேள்வி எழுந்துள்ளது.

இந்த வகை ரேசன் அட்டைக்கு ரூ.1000 நிச்சயம் 

அதன் படி, PHH என்ற வறுமைக் கோட்டுக்குக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், 35 கிலோஅரிசி வாங்கும் PHAAY குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும்.

1000 per month only if you have this ration card

அதேநேரத்தில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானமும் கணக்கிடப்பட்டு இந்த பயனர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்களுக்கும் கிடைக்குமா? 

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடையும் கல்லூரி பெண்களின் தாயார்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று கூறப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

குடும்பத்தலைவிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால், ரேஷன் அட்டையில் எதுவும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

உங்களுக்கு கிடைக்காது

அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் வருமான வரி செலுத்துவோர் இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடம்பெற மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.