குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
வருகிற பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 ஆயிரம் வழங்கப்படுவது பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கலைஞர் மீது தாக்குதல்
அப்போது அவர் பேசுகையில், ஈரோடு பெரியார் பிறந்த மண், கலைஞர் வளர்ந்தமண், திமுகவுக்கு அடித்தளம் அமைத்த மண் என பேசினார். மேலும், பழைய நினைவுகளை அவர் கூறினார்.
ஒரு நேரத்தில் கலைஞர் மேடை நாடகம் போட தயார் செய்த போது ஒரு பிரிவினர் அந்த நாடகத்தை போட கூடாது என கலைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். அப்போது புதுச்சேரியில் இருந்த பெரியார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கலைஞரை காப்பாற்றி, ஈரோட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கு, குடியரசு பத்திரிகையில் துணை ஆசிரியராக கலைஞருக்கு பொறுப்பு கொடுத்தார் தந்தை பெரியார். எனவும், அவரது அண்ணன் மகன் தான் இ.வி.கே.சம்பத் சிறந்த பேச்சாளர் என்று அறிஞர் அண்ணாவால் பெயர் பெற்றவர். சம்பத் மைந்தனுக்கு , கலைஞர் மைந்தன் ஒட்டு கேட்டு வந்துள்ளேன்.’ என கூறி வாக்கு சேகரித்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?
என் உயிரோடு கலந்தது ஈரோடு தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு.
தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதம் நிறைவேற்றி உள்ளோம்.மீதமுள்ள வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார். அவர் கண் டாக்டரை பார்த்து கண்ணாடி வாங்கி போட்டுக் கொண்டு நான் சொன்ன ஆதாரங்களை பார்க்கட்டும் என்றார்.
நான் இருக்கும் காலத்திற்குள் நீட் விலக்கை பெற்றே தீர முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 குறித்த அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் அறிவி்க்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.