இனிப்பான செய்தி..! அடுத்த மாதம் முதல் குடும்ப தலைவிக்கு ரூ.1000
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியான, 'குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் இலவசம்' திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, பட்ஜெட்டில் வெளியிட அரசு தயாராகி வருகிறது.
குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 எப்போது?
தமிழகத்தில் 2021 சட்டசபை தேர்தலின்போது குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., வாக்குறுதி அளித்தது . ஆனால் ஒன்றரை ஆண்டுகளாகியும் இதுவரை உரிமத்தொகை வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ,குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடவேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை வைத்தவண்ணமாக இருந்தனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு, வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம் என, அனைத்து இலவச திட்டங்களையும், ரேஷன் கடைகள் வாயிலாக, அரசு செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என வசதி படைத்த பலரும் ரேஷன் கார்டு வாங்கியுள்ளனர்.
அடுத்த மாதம் முதல் செயல்படுத்த திட்டம்?
எனவே, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, அணைத்து கார்டுதாரர்களுக்கு வழங்காமல், ஏழ்மையில் உள்ள தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மட்டும் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில், அரசு 1கோடி குடும்பங்களுக்கு மட்டும், மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
அதற்கு ஏற்ப தேர்வு செய்யப்படும் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளும் பெறப்படவுள்ளன . குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமத் தொகை திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை, அரசு அடுத்த த மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக, 50 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு, 1,000 ரூபாய் இலவசம் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.