டெல்லி கூடுதல் கமிஷனர் சின்மோய் பிஸ்வால் உள்பட 1000 போலிசாருக்கு கொரோனா - டெல்லி காவல்துறை அறிவிப்பு

india covid spread omicron threat covid positive 1000 delhi polce under self quarantine
By Swetha Subash Jan 10, 2022 01:22 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

சுமார் 1,000 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருமாறிய ஒமைக்ரான் பரவல் காரணமாக ஆயிரங்களில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது லட்சங்களாக பதிவாகி வருகிறது.

அரசியல் பிரபலங்கள், திரைத்துறையினர், ஊடகவியலாளார்கள், தொழிலதிபர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் என தினசரி அளவில் பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதே போல கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் மாணவர்கள், பணியாளர்கள் என கொத்துக் கொத்தாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் நாடாளுமன்ற பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்தது.

இந்நிலையில், டெல்லி காவல்துறையில், பணியாற்றி வரும் 1,000 போலீசார் கொரோனாவால் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

டெல்லி கூடுதல் கமிஷனர் சின்மோய் பிஸ்வால், காவல்துறை செய்தித்தொடர்பாளர், போலீசார் என 1,000 பேர் ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,

இவர்கள் அனைவரும் தற்போது வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.