பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 கோடிக்கு மது விற்பனை?
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த ஜனவரி 13ம் தேதி முதல் 17-ம் தேதி வரை டாஸ்மாக கடைகளில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1000 கோடிக்கு மதுவிற்பனை
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த தீபாவளி பண்டிகையை விட மிக அதிகளவாக பொங்கல் பண்டிகையில் ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதியன்று ரூ.150 கோடி அளவிலும், 14-ம் தேதியன்று ரூ.250 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. திருவள்ளுர் தினத்தையொட்டி 16-ம் தேதியன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை, பெரும் பொங்கல் தினத்தன்று மட்டும் ரூ.450 கோடிக்கு மதுபானங்கள் மது பிரியர்கள் அள்ளிச் சென்று குடித்து தீர்த்திருக்கின்றனர்.
இந்த 3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.850 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ள நிலையில் காணும் பொங்கல் அன்று 300 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.
இதனால் இந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் மது விற்பனை ரூ.1,000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.