திருடிய ஆயிரம் கார்களை ஷோ ரூம் போல நிறுத்தி வைத்திருந்த பட்டதாரி - என்ன நடந்தது?

theft 1000 car stolen car as showroom
By Anupriyamkumaresan Oct 01, 2021 09:22 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

ஒரு பட்டதாரி வாலிபர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்களை திருடியதால் கைது செய்யப்பட்டார் . டெல்லியை சேர்ந்த 25 வயதான தீபக் ராணா டிகிரி முடித்து விட்டு வேலையில்லாமல் இருந்தார் .

அப்போது அவர் தான் எப்படியாவது குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக திட்டம் போட்டார் .அதற்கு அவர் பல தொழில்கள் செய்து தோல்வியுற்றார் .பிறகு கார் திருடும் தொழிலை தேர்ந்தெடுத்தார் .

அதன் படி அவர் தன்னுடைய கூட்டாளி ராம்ஜீத்துடன் சேர்ந்து புது டெக்னீக்கில் டெல்லி மற்றும் உத்திரபிரதேச பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களை திருடினார் .

திருடிய ஆயிரம் கார்களை ஷோ ரூம் போல நிறுத்தி வைத்திருந்த பட்டதாரி - என்ன நடந்தது? | 1000 Car Theft Thief Kept Car As A Showroom

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு போலீசுக்கு அவர்களை பற்றி தெரிய வந்தது .அதனால் போலீசார் அவர்களை பிடிக்க பல இடங்களில் சிசிடிவி கேமராவை வைத்தனர் .

அதை ஆராய்ந்து பார்த்து இரண்டு மாதங்களுக்கு முன்பு ராணாவின் கூட்டாளி ராம்ஜீத்தை போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் டெல்லி-என்சிஆர் மற்றும் உத்தரபிரதேசத்தில் செயல்பட்டதாக கூறினார் .

மேலும் விசாரணையின் போது, ​​திருடப்பட்ட வாகனங்களை மீரட்டில் விற்றதாக அவர் ஒப்புக்கொண்டார்.பிறகு இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ராணாவை பிடிக்க வலை விரித்தனர் அதனால் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் ராணாவின் புகைப்படங்களை எடுத்து அவற்றை மாநிலத்தின் பல போலீஸ் அதிகாரிகளுக்கு அனுப்பினர் .

அப்போது ராணாவும் அவரது மனைவியும் சிம்லாவுக்குச் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சிம்லாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து ராணாவை போலீசார் கைது செய்தனர்.