ஆயிரக்கணக்கில் அழுகிய நாய்களின் சடலம் - கொடூர சைக்கோவின் பின்னணி என்ன?

South Korea
By Sumathi Mar 10, 2023 10:55 AM GMT
Report

நாய்களை பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நாய்களின் சடலம்

தென்கொரியா கியாங்கி மகானத்தில் உள்ளது யாங் பியாங் நகர். இந்த நகரத்தில் வசித்து வரும் நபர் ஒருவர் தனது நாயை காணவில்லை என்று ஒவ்வொறு வீடாக சென்று தேடினார். அப்போது ஒரு வீட்டில் நாய்களை அடைத்து கொடுமை படுத்துவதை பார்த்த அவர் அதிர்ந்து போனார்.


அந்த வீட்டில் சாக்கு பைகள், ரப்பர் பெட்டிகள், இரும்புக் கூண்டுகளில் 1000 கணக்கில் நாய்கள் அடைத்து கொடுமைப்படுத்தப் பட்டுள்ளது. பல வருடங்களாக இப்படி கொலை செய்யப்பட்டுள்ளதால் சில நாய்கள் எலும்புக்கூடுகளாக சில நாய்கள் சதைகள் எல்லாம் அழுகி கிடந்திருக்கின்றன.

சிக்கிய சைக்கோ

அதில் பல நாய்கள் தண்ணீர், உணவு இல்லாமல் நோய் வாய்ப்பட்டு எழக் கூட முடியாமல் கிடந்திருக்கின்றன. இதை பார்த்த நபர் உடனடியாக விலங்குகள் ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த அதிகாரிகள் உயிருக்கு ஊசலாடி கொண்டிருந்த நாய்களை மீட்டு,

விசாரனை செய்த போது அந்த வீட்டில் 60 வயதுடைய நபர் இப்படி செய்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து இந்த சம்பவம் நடந்து வந்துள்ளது. பராமரிப்பு என்ற பெயரில் தொகை வாங்கிக்கொண்டு உரிமையாளர்களிடம் நாயை வாங்கி கொடுமைப்படுத்தி கொலை செய்து வந்துள்ளார். தொடர்ந்து அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.