10 நிமிஷம் லேட்.. ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனை - சிறுமி பலி!
ஆசிரியர் கொடுத்த கொடூர தண்டனையால் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிட்அப் தண்டனை
மகாராஷ்டிரா, வாசை எனுமிடத்தில் அனுமந்த் வித்யா மந்திர் என்ற உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6ஆம் வகுப்பு பயிலும் காஜல் கோன்ட் என்ற மாணவி, பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாகச் சென்றதால்,

100 முறை தோப்புக்கரணம் போடச் சொல்லி ஆசிரியர் கட்டாயப்படுத்தியுள்ளார். முதுகில் பள்ளிக்கூடப் புத்தகப் பையை சுமந்தபடியே 100 முறை தோப்புக்கரணம் போட்டதால் சிறுமிக்கு கடுமையான முதுகு வலி ஏற்பட்டுள்ளது.
சிறுமி பலி
வீட்டிற்கு வந்ததும், உடல்நிலை இன்னும் மோசமடைந்ததால், மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

பள்ளி ஆசிரியரின் கடுமையான தண்டனையே உயிரிழப்புக்குக் காரணம் என சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 'மாணவி மரணத்திற்கு ஆசிரியை கொடுத்த தண்டனைதான் காரணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் தவறை ஏற்றுக்கொள்வதாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.