நடுவர் வழங்கிய சர்ச்சை முடிவு - ரசிகர்களின் மோதலில் 100 பேர் பலி
நடுவரின் சர்ச்சை முடிவால் ரசிகர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கால்பந்து போட்டி
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா(Guinea) நாட்டில் ஆட்சியை கைப்பற்றி தன்னை அதிபராக நியமித்து கொண்டவர் மாமடி டூம்பூயா.
2025 ஆம் ஆண்டு கினியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாமடி டூம்பூயாவிற்கு ஆதரவு திரட்ட அவரது சார்பில் நேற்று(01.12.2024) N'Zerekore நகரில் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.
100 பேர் பலி
இதில் நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் இரு அணிகளின் ரசிகர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டது. மைதானத்தில் புகுந்து கடுமையாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதல் வன்முறையாக வெடித்து இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Clashes at a football match in Guinea's N'Zerekore left around 100 dead, hospital sources report.
— MASHIAHIYIM QODESHIM TALMIDIM (@AlvesPedro57992) December 2, 2024
Scenes of carnage included overflowing morgues and hallways.
Unverified videos show chaos, with angry crowds later torching a police station. Authorities have yet to confirm the… pic.twitter.com/7Mhcu6hNFv
காயமடைந்த நூற்றுக்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனை முழுவதும் சடலங்களால் நிரம்பியுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.