நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களின் நிலை தெரியவில்லை

Nepal
By Fathima Aug 30, 2026 08:25 AM GMT
Report

நேபாள வெள்ளத்தில் சிக்கிய 100 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரையிலும் 682 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 2362 பேர் மாயமாகி இருப்பதாக நேபாள அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல உடல்கள் உருக்குலைந்து சிதைந்து உள்ளன, சேறும் சகதியுமாக காணப்படும் பகுதிகளில் உடல்களை தேடி மீட்புப்படையினர் மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் சிக்கிய 3700 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் சிக்கிய 100 தமிழர்களின் நிலை தெரியவில்லை | 100 Members Not Rescued In Nepal Flood

100 தமிழர்களின் நிலை தெரியவில்லை

இவர்களில் 21 தமிழர்கள் மீட்கப்பட்டு சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள், இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கு இணங்க நேபாளத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லியில் முகாமிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டோம்.

219 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள், நாளை இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள். மீதமுள்ள 100 தமிழர்களின் நிலை தெரியவில்லை, ஹெலிகொப்டர் மூலமாக தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.