ராணுவ வான்வழி தாக்குதல்; குழந்தைகள் உட்பட 100 பேர் பலி - ஐநா கண்டனம்
ராணுவ வான்வழி தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ளனர்.
வான்வழி தாக்குதல்
மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அந்நாட்டு தலைவர் ஆங் சான்சூகி உள்பட பல தலைவர்களை கைது செய்தது. இதற்கு எதிராக குரல் கொடுத்த மக்களையும் ஒடுக்கினர்.

ஆனாலும், ராணுவத்திற்கு எதிராக பல அமைப்புகள் போராட்டைத்தை கைவிடவில்லை. இந்நிலையில், சாஜைங் பகுதியில் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. தில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
100 பேர் பலி
பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். பாசிகி கிராமம் அருகே ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு, தனது உள்ளூர் அலுவலகத்தை திறந்தது. இந்நிகழ்ச்சியில் 150 பேர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மீது போர் விமானம் குண்டு வீசியது.
பின்னர் அரை மணி நேரம் கழித்து ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
தற்போது இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.