இந்தியாவின் 100 ரூபாய் சிங்கப்பூரில் எவ்வளவு தெரியுமா?
பொதுவாகவே வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்றால் அனைவருக்குமே பிடிக்கும். ஆனால் அதற்கு முன்னர் வெளிநாட்டு நாணய மாற்று விகிதம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாதது.
அந்தவகையில்,பெரும்பாலானவர்களின் கனவு தேசமாக காணப்படும் சிங்கப்பூரில் இந்தியாவின் ரூபாய்க்கு எவ்வளவு மாற்றீடு வழங்கப்படுகின்றது என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகளாவிய ரீதியில் சிங்கப்பூர் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக அறியப்படுகின்றது. இங்கு சுற்றிப் பார்ப்பதற்கு தாவரவியல் பூங்காக்கள், கோயில்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் உணவகங்கள் போன்ற பல்வேறு சுற்றுலா மையங்கள் பிரசித்தி பெற்றவை.
நீங்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டிய "சிங்கப்பூர் நாணயத்தில் இந்திய ரூபாய் எவ்வளவு?என்பது தான்.

சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ நாணயமாக சிங்கப்பூர் டாலர் (SGD) குறிப்பிடப்படுகின்றது. இந்த நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும்.
சிங்கப்பூர் டாலர், இந்திய ரூபாயை (INR) விட அதிக மதிப்புடையதாக இருப்பதுடன் அதன் மாற்று விகிதம் தினமும் மாற்றமைடையும் என்பதால், இங்கு செல்வதற்கு முன்னர் நிச்சயம் நாணய மாற்று விகிதம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகின்றது.

சந்தை நிலைமைகள், டாலரின் மாற்று விகிதம் மற்றும் சர்வதேச வணிகச் சூழல் போன்ற காரணிகளைகள் சிங்கப்பூர் டாலரின் மாற்று விகிதத்தில் தாக்கம் செலுத்துகின்றன்.
சிங்கப்பூரில் ஒரு இந்திய ரூபாய் எவ்வளவு?
2026 ஆம் ஜனவரி 20ஆம் திகதி நிலவரப்படி , 1 இந்திய ரூபாய் தோராயமாக 0.014 சிங்கப்பூர் டாலர் மதிப்புடையது. அதாவது, நீங்கள் 100 ரூபாயை எடுத்துச் சென்றால், சிங்கப்பூரில் அதன் மதிப்பு தோராயமாக 1.41 சிங்கப்பூர் டாலர் மதிப்புடையதாக இருக்கும்.

இந்த மாற்று விகிதத்தைப் பார்க்கும்போது, சிங்கப்பூர் நாணயம் இந்திய ரூபாயை விட மதிப்புமிக்கது என்பது தெளிவாக புலப்படுகின்றது.
எனவே இங்கு சுற்றுலா செல்ல போகின்றீர்கள் என்றால், மாற்று விகிதத்தைச் சரிபார்ப்பது நல்லது. வலைத்தளங்கள் அல்லது ஆப்ஸ்களைப் பயன்படுத்தி அதனை தெரிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.