முடிவுக்கு வராத யுத்தம் : உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்

Russo-Ukrainian War Ukraine
By Irumporai Jun 03, 2022 11:59 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

உக்ரன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியதில் இருந்தே, அந்நாட்டு மக்கள் பாதுகாப்பு தேடி அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

பெரும்பாலான மக்கள் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். இது தவிர ருமேனியா, ஹங்கேரி, மால்டோவா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கும் உக்ரைன் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர்.

முடிவுக்கு வராத யுத்தம் : உக்ரைனில் இருந்து 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம் | 100 Days Of Russia Attack 68 Lakh Ukraine

போலந்து நாட்டில் மட்டும் 36 லட்சம் பேர் குடியேறியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அந்நாட்டின் மக்கள் தொகை கடந்த 3 மாதங்களில் 10% அதிகரித்துவிட்டது. ரஷியா தாக்குதல் காரணமாக உக்ரைனிலிருந்து மொத்தம் 68 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்தும் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தவில்லை.