திடீரென வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.100 கோடி - அதிர்ந்து போன இளைஞர்
இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பணம் வரவாக வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அக்கவுண்டில் வந்து விழுந்த ரூ.100 கோடி
நசிருல்லா மண்டலம், முர்ஷிதாபாத் மாவட்டம் தேகங்கா கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் அக்கவுண்ட் உள்ளது.
அந்த அக்கவுண்டில் வெறும் ரூ.17 மட்டுமே இருப்பு இருந்துள்ளது. இந்த நிலையில் நசிருல்லாவின் வங்கி கணக்கில் ரூ.100 கோடி வந்தது எப்படி என்று சைபர் குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதுவரை அவருக்கு தனது அக்கவுண்டில் ரூ.100 கோடி வந்ததே தெரியாது. இது குறித்து தொலைபேசியில் நசிருல்லாவிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நசிருல்லா தனது கூகுல் பே ஆப் மூலமாக தனது வங்கி அக்கவுண்டில் உள்ள பேலன்ஸ் தொகையை பார்த்த போது தனது கணக்கில் ரூ.100 கோடி வந்திருந்தது தெரியவந்துள்ளது.
விசாரணைக்கு அழைப்பு - அச்சத்தில் இளைஞர்
இந்த நிலையில், மே 30 ஆம் தேதி நசிருல்லா நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என்றும், அன்றைய தினம் இந்தப் பண வரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சைபர் பிரிவு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நசிருல்லாவுக்கு தற்போது 26 வயதாகும் நிலையில், இப்போது பெற்றோர், மனைவி, இரண்டு குழந்தைகளுடன் அவர் வசித்து வருகின்றார். கூலி தொழில் செய்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார்.
வங்கி அக்கவுண்டில் ரூ.100 கோடி வந்ததால் போலீசார் கைது செய்யலாம் என்றும் தன்னை அடித்து விசாரணை நடத்துவார்கள் என்று நசிருல்லா அச்சப்படுகிறார்.
இதனால் அவரது குடும்பத்தினரும் சோகத்தில் முழ்கி உள்ளனர். நசிருல்லா தனக்கு இந்த பணம் வேண்டாம் என்றும், இதை அனுப்பி வைத்தவர்களே திருப்பி எடுத்துக் கொள்ளட்டும் என்றும் நசிருல்லா தெரிவிக்கிறார்.