சென்னையில் ஒரே நாளில் 100 குழந்தைகளுக்கு காய்ச்சல் - மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னையில் காய்ச்சலால் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேகமாக பரவும் காய்ச்சல்
கடந்த சில நாட்களாக சென்னையில் பரவும் காய்ச்சலால் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றது.
இதனிடையே எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்று சளி, இரும்பல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் குவிந்தனர்.
இதையடுத்து காய்ச்சல் காரணமாக வந்த குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து காய்ச்சல், இருமல் இருப்பதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துமனையில் உள்ள படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
மருத்துவர்கள் எச்சரிக்கை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும் இருமல் குறைந்தது 2 வாரங்கள் நீடிக்கிறது.
குழந்தைகளுக்கு அதிகம் பாதிக்கும் வைரஸ் குறித்து பரிசோதனை நடைபெற்று வருகிறது. அவர்களது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு வானிலை மாற்றமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த காய்ச்சலால் நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது.
இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுத்தமாக இருக்க வேண்டும்.
முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்