விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவம் - சோகத்தில் மக்கள்
ராமேஸ்வரத்தில் மர்ம காய்ச்சலால் 10 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரே பூபஸ் - வினித்தா தம்பதியரின் 10 வயது மகளான சேரோன் ரோஸ் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இதனிடையே சிறுமிக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது, உடனடியாக தங்கச்சிமடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு ராமநாதபுரம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்,
ஆனால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட சிறுமி திடீர் என்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென உயிரிழந்த சம்பவம் தங்கச்சிமடம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.