காதலித்து ஏமாற்றினால் 10 ஆண்டு சிறை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கடலுார் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம் புதுப்பாளையம் லோகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார்.
இவர் 27 வயதான பெண்ணை காதலித்துள்ளார்.இதையடுத்து இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இதையடுத்து அந்த பெண் தன் திருமணத்திற்கு வைத்திருந்த 50 சவரன் நகையை கொடுத்துள்ளார்.
இருவரும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் பிரவீன்குமார் காதலியை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.
இதனிடையே வேறு பெண்ணுடன் பிரவீன்குமாருக்கு திருமணம் நடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் 2018 ஆம் ஆண்டு பிரவீன்குமார் வீட்டுக்கு சென்ற கேட்ட போது அப்பெண்ணை அவரது தந்தை,தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் சேர்ந்து இருவரையும் திட்டி தாக்கியுள்ளனர்.
திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வீட்டிற்கு வந்தால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கடலுார் அனைத்து மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பிரவீன்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 4 பேரை கைது செய்து கடலுார் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாலகிருஷ்ணன் பெண்ணை ஏமாற்றிய பிரவீன்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும்
அவரது தந்தை பாலகிருஷ்ணன், தாய் நிர்மலா, சகோதரர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.