10 வயது சிறுவனை நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய இளைஞர்!
ஜெய் ஸ்ரீ ராம் கூற சொல்லி 10 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜெய் ஸ்ரீ ராம்
மத்தியப்பிரதேசத்தில், 10 வயது சிறுவன் டியூஷன் முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளான். அப்போது, அஜய் பில் என்பவர் அந்த சிறுவனைப் பிடித்து, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிடச் சொல்லியுள்ளார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அந்த சிறுவன்

ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட மறுத்தாக கூறப்படுகிறது. அதனால் சிறுவனிடம் கடுமையாக அத்துமீறியுள்ளார். அருகே இருந்தவர்களும் எதுவும் கேட்கவில்லை எனத் தெரிகிறது. அந்த சிறுவன் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லும் வரை தாக்கப்பட்டுள்ளான்.
கொடூர தாக்குதல்
ஒரு கட்டத்தில் பயந்து ஜெய் ஸ்ரீ ராம் எனச் சொல்லியுள்ளான். அதனையடுத்து சிறுவன் அழுது கொண்டே வீடு திரும்பியுள்ளான். நடந்ததை கேட்ட பெற்றோர் ஆத்திரமடைந்து போலீஸில் புகாரளித்தனர்.
இது தொடர்பாகச் சம்மந்தப்பட்ட நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மேலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.