10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை .. ஹரியானவில் பரபரப்பு!
ஹரியானாவில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் கடந்த மே மாதம் 24ம் தேதி சிறுமி ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது அங்கு வந்த ஒருவர் சிறுமியை கடத்தி அருகில் இருந்த பள்ளிக்கு கொண்டு சென்றுள்ளார் அங்கு இருந்த 8 பேருடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்துசமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த துயரத்தை பயத்தின் காரணமாக சிறுமி பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை.
பின்னர் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதால் சிறுமியின் பெற்றோருக்கு இந்த இந்த சம்பவம் தெரிய வரவே இது குறித்து காவல் நிலையத்தில் ஜூன் 9ம் தேதி புகார் அளித்தனர்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் 9 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.