'மூளையை உண்ணும் அமீபா' - மூக்கு வழியாக நுழைந்து 10 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Colombia
By Jiyath Nov 28, 2023 12:30 PM GMT
Report

மூளையை உண்ணும் அமீபாவால் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உயிரிழப்பு 

தென் அமெரிக்க நாடான கொலம்பியவை சேர்ந்த ஸ்டெபானியா வில்லமிசார் (10) என்ற சிறுமி நீச்சல் குளத்தில் குளித்துள்ளார். சில நாட்களில் அவருக்கு காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

பின்னர் சில நாட்களில் அது சரியாகியுள்ளது. இதனால் அது சாதாரண அலர்ஜியாக இருக்கும் என அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால் 2 வாரங்களில் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமானதாக மாறியுள்ளது. படுக்கையிலிருந்தே எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் உடனடியாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோது, சிகிச்சை பலனின்றி, அந்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

அமீபிக் என்செபாலிடிஸ்

இதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டதில், அந்த சிறுமிக்கு 'அமீபிக் என்செபாலிடிஸ்' என்ற பாதிப்பு இருந்தை உறுதி செய்துள்ளனர். இது பொதுவாக "மூளையை உண்ணும் அமீபா" என்று குறிப்பிடுவார்கள். இந்த நோயானது மத்திய நரம்பு மண்டலத்தை நேரடியாகத் தாக்கும்.

இந்த பாதிப்பால் 95% உயிரிழக்க வாய்ப்புள்ளது. இந்த பாதிப்பானது நெக்லேரியா ஃபோலேரி என்ற அமீபாவால் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இது பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்படும் குளங்கள் அல்லது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும்.

அந்த சிறுமி நீச்சல் குளத்தில் விளையாடிய போது மூக்கின் வழியாக அந்த அமீபா சிறுமியின் உடலில் நுழைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.