பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 10 வயது சிறுவன்!! கதறி அழுத தந்தை!!
சென்னையில் அப்பாவின் வேட்டியால் பாத்ரூமில் 10 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்த சதீஷ், ஜீவா தம்பதியினருக்கு, 13 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார் மனைவி ஜீவா.
இதன் பின்னர் தந்தை சதீஷ் தான் சொந்தமாக ஆட்டோ ஓட்டி, இரு குழந்தைகளையும் வளர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று, வழக்கம் போல் சதீஷ் ஆட்டோ ஓட்ட சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த போது, அக்கா கிருபாவிடம், 10 வயது சிறுவனான ரித்தீஸ் குளிக்க போவதாக கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் தம்பி திரும்பி வராததால் சந்தேகமடைந்த 13 வயது அக்கா, கதவை தட்டி இருக்கிறார். ஆனால் தம்பி கதவை திறக்காததால் அச்சத்தில் கத்தி அழுதுள்ளார். இவரின் அழுகுரல் கேட்டு வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து சென்று பார்த்தனர். அதில் ரித்தீஸ் அவரது அப்பா வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாரிடம்
புகார் அளித்துள்ளனர்
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரித்தீஷின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிற்கு வந்த சதீஷ் மகனின் உடலை பார்த்து கதறி அழுத்துள்ளார்.