தினமும் வீணாகும் 10 டன் காய்கறிகள் - கோயம்பேட்டில் தொடரும் அவலம்..!
சென்னையின் மிகப் பெரிய மார்கெட்டான கோயம்பேடு மார்கெட்டில் தினமும் 10 டன் காய்கறிகள் வீணாக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக காய்கறி விளைச்சல் எதிர்பார்த்ததை விட அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி லாரிகளின் வரத்து 100 முதல் 120 வரை அதிகரித்துள்ளது.
இதையடுத்து காய்கறி விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.தக்காளி,கத்தாரிக்காய்,கேரட்,வெண்டைக்காய்,முள்ளங்கி,உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் தினசரி டன் கணக்கில் தேங்கி வீணாகி வருகிறது.
சுமார் 10 டன் காய்கறிகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளன.
முக்கிய காய்கறிகள் தக்காளி,கத்தரிக்காய் உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகள் விலை ரூ.10-க்கும் கீழ் வீழ்ச்சி அடைந்துள்ளது.
தினசரி 10 டன் அளவிலான காய்கறிகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.