ஆசை வார்த்தை கூறி 1500 பேரை ஏமாற்றிய பெண்கள் - 800 கோடி மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்
சென்னையில் 10 ஆயிரம் பேரை ஏமாற்றிய 3 பெண்கள் ரூ.800 கோடிகளை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோடிகளை சுருட்டிய பெண்கள் - கைது
சென்னையில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறி மக்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இதை நம்பிய 10 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர். இந்த நிலையில் வட்டியையும், அசல் தொகையையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 1500 பேர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பெண்களை கைது செய்தனர்.
இந்த மோசடி விவகாரத்தில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 10 ஆயிரம் பேரிடம் 800 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.