10-ம் வகுப்பு மாணவியை பல நாட்களாக கற்பழித்த முதியவர்கள் - காதலனுடன் பேசியதை போட்டோ எடுத்து மிரட்டி கொடூரம்!
திண்டுக்கல் அருகே தன் சக வகுப்பு மாணவரான காதலருடன் பேசி கொண்டிருந்த 10-ம் வகுப்பு சிறுமியை போட்டோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் தேவத்தூரை சேர்ந்த 15 வயது சிறுமி, தன்னுடன் படித்து வந்த சக மாணவரை பல நாட்களாக காதலித்து வந்துள்ளார்.
அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் மணி என்ற முதியவர் தனது செல்போனில் போட்டோ எடுத்திருக்கிறார்.
இதை அந்த சிறுமியிடம் காட்டி, வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டி அவரை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரை மிரட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.
இந்த விஷயம் மணியின் நண்பர் கனகராஜுக்கு தெரியவர அவரும் இதை காரணம் காட்டி தொடர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
இதனால் சிறுமியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துள்ளது. இதனை கண்ட பெற்றோர் சிறுமியிடம் கேட்க உண்மையெல்லாம் கூறி அழுத்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரை அடுத்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.