சத்தீஸ்கரில் நக்சலைட்ஸ் நடத்திய கொடூர தாக்குதலில் - 10 பாதுகாப்பு படை வீரர்கள் பலி!
சத்தீஸ்கர் மாவட்டத்தில் நக்சலைட்ஸ் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேர் வீர மரணம் அடைந்தனர்.
நக்சலைட்ஸ் தாக்குதல்
சத்தீஸ்கர் மாநிலம் தன்டேவாடா மாவட்டத்தில், அரன்பூர் அருகே பஸ்தார் பிராந்தியத்தில் தண்டேவடா வனப்பகுதியில் , சமேலி கிராமங்களில் மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர் என பாதுகாப்பு தரப்புக்கு உளவுத்தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்பொழுது அவர்கள் ரோந்து முடிந்து திரும்பும்பொழுது, அவர்களின் வாகனத்தை குறிவைத்து அங்கு புதைக்கப்பட்டிருந்த கன்னிவெடிகளை நக்சலைட்ஸ்கள் வெடிக்க செய்தனர்.
பொய்யான உளவு தகவல்
இந்த செய்யலால், அங்கு சென்ற துணை ராணுவ படையினர் 10 பேர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்ந்து, மாவோயிஸ்டுகள் திட்டமிட்டு பொய்யான உளவுத் தகவலை அனுப்பி வைத்து தாக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவர் நக்சலைட்ஸ் அரசிடம் இருந்து தப்பமுடியாது, இந்த யுத்தம் இறுதி கட்டத்தை எட்டோயுள்ளதாக அவர் கூறினார்.
பிறகு உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அமித்ஷா உறுதி அளித்தார்.