நாடாளுமன்ற தேர்தல் - திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9, புதுச்சேரியில் ஒன்று என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு
நாடாளுமனற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொமதேக கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
10 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விசிகவுக்கு 2 சீட், மதிமுகவுக்கு 1 சீட் என ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவை தேர்தலில் 1 இடம் ஒதுக்க திமுக ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த முறையும் திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9, புதுச்சேரியில் ஒன்று என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.