திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள்

DMK DMDK
By Fathima Mar 24, 2026 02:51 PM GMT
Report

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், ‘நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேசிய முற்போக்கு திராவிட கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம், தமிழ்நாட்டில் 10 (பத்து) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள் | 10 Seat For Dmdk In Dmk Alliance

செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, மொத்தம் 25 பேர் அடங்கிய பட்டியலை வழங்கினோம்.

கூட்டணி நலனுக்காக குறைந்த தொகுதிகளை பெற்றுள்ளோம், திமுக கூட்டணி வெற்றி பெறும்.

நாளை அல்லது நாளை மறுநாள் எந்தெந்த தொகுதிகள் என்பது உறுதி செய்யப்படும், ஏப்ரல் 1ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.