கலெக்டர் அலுவலக லிப்டில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்பு
கரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள லிப்டில் சிக்கிய 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று தொழிலாளர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன் கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்து அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விஐபி லிப்டில் தரை தளத்திற்கு சென்று கொண்டிருந்த பொழுது லிஃப்ட் தரை தளத்தில் மாட்டிக்கொண்டது.
லிப்டில் சிக்கியவர்கள் மீட்பு
சம்பவம் அறிந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் லிப்டில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார்.
பின்னர் அங்கு வந்த அவர்கள் லிப்டில் மாட்டிக்கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக உள்ளே சிக்கிக் கொண்ட மூதாட்டி உட்பட 10 பேரை பத்திரமாக மீட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.