உலகின் மிகவும் ஆபத்தான முதல் 5 நாடுகள் இவைதான் - என்ன காரணம் தெரியுமா?
உலகின் மிகவும் ஆபத்தான முதல் 5 நாடுகள் குறித்த தகவல்.
உலகின் ஆபத்தான நாடுகள்
உலகில் ஒரு நாட்டில் நிலவும் உள்நாட்டு சூழல், மக்களின் பாதுகாப்பு, அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கொண்டு உலகின் ஆபத்தான நாடுகள் என்பதை சர்வதேச அமைதி குறியீடு (Global peace index) பட்டியலிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 5 நாடுகள் இவைகள்தான்.
ஆப்கானிஸ்தான்
கடந்த 2021ம் ஆண்டு தாலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிராக பல்வேறு கடுமையான சட்டதிட்டங்களை தாலிபான்கள் செயல்படுத்தி வருகின்றனர்.
அதில் "பெண்கள் உயர் கல்வி கற்க தடை, அழகு நிலையங்களுக்கு செல்ல தடை உள்ளிட்ட பல கடுமையான கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 3.544 என்ற புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
ஏமன்
சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட ஏமன் நாட்டில் உள்நாட்டு போரால் கடுமையான குழப்பமான சூழல் நிலவுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இதன் காரணமாக மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து அலி அப்துல்லா சாலே எமன் நாட்டின் அதிபராக பதவி வகித்து வருகிறார். எனினும் அங்கு உள்நாட்டு போர் முடிவுக்கு வரவில்லை. 8 வருடங்களாக தொடரும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ஏமன் 2வது இடத்தில் உள்ளது.
சிரியா
உள்நாட்டு போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று. அரசியல் நிலைத்தன்மை மற்றும் மோதல் ஆகியவற்றால் சிரியா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது சிரியா.
ரஷ்யா
உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது ரஷ்யா. அதிகரித்து வரும் கொலைகள் அரசியல் பிரச்சினைகள் அதிகரிப்பது உள்ளிட்டவற்றால் ரஷ்யா இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் புதினுக்கு எதிராக சர்வதேச அளவிலும் எதிர்ப்புகள் கிளம்பியிருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன. இதனால் உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் ரஷ்யா 4வது இடத்தில் உள்ளது.
தெற்கு சூடான்
தெற்கு சூடான், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடாகும். கடந்த 2011ம் ஆண்டு முதலே உள்நாட்டு போர் காரணமாக தெற்கு சூடான் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உலகின் ஆபத்தான நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது தெற்கு சூடான்.