இனி 10 நிமிட டெலிவரி கிடையாது - அரசு அதிரடி நடவடிக்கை

Government Of India Swiggy Online business
By Sumathi Jan 14, 2026 07:22 AM GMT
Report

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் 10 நிமிட டெலிவரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஆன்லைன் டெலிவரி 

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் டெலிவரி தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 25 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இனி 10 நிமிட டெலிவரி கிடையாது - அரசு அதிரடி நடவடிக்கை | 10 Minute Delivery Blinkit Swiggy India

அப்போது பணிச்சூழல், டெலிவரி அழுத்தம் மற்றும் பணி பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை எழுப்பினர். தொடர்ந்து குறுகிய நேர டெலிவரி விளம்பரங்கள் ஊழியர்களுக்கு கடுமையான பணி அழுத்தத்தை உருவாக்குவதாக தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

பின் மத்திய தொழிலாளர் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அரசு முடிவு

அப்போது, டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களில் ‘10 நிமிட டெலிவரி' உள்ளிட்ட குறுகிய கால டெலிவரி குறித்த விளம்பரத்தை நீக்குமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம் எது தெரியுமா?

ஆங்கிலேயர்களால் ஆளப்படாத ஒரே இந்திய மாநிலம் எது தெரியுமா?

இதனையடுத்து பிளிங்கிட் தனது அனைத்து விளம்பரங்களிலும் இருந்து ‘10 நிமிட டெலிவரி’ என்ற விளம்பரத்தை நீக்கியுள்ளது.

இதனையடுத்து அனைத்து நிறுவனங்களும் தங்கள் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களிலிருந்து குறுகிய கால டெலிவரி நேர வாக்குறுதிகளை அகற்றுவதற்கு அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.