ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் கொலை - கொந்தளிக்கும் வன விலங்கு ஆர்வலர்கள்

Kenya Death
By Thahir May 15, 2023 08:14 AM GMT
Report

கென்யாவில் கடந்த ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்ட சிங்கங்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வயதான சிங்கத்தை கொன்ற மக்கள் 

கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லுான்கிடோ உள்பட 10 சிங்கங்கள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திகளில் கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் இருந்த வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஆண் சிங்கம் லுான்கிடோ உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்றுள்ளது. அப்போது அங்கு கல்நாடைகளை மேய்ப்பவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

10-lions-killed-in-one-week-in-kenya

பின்னர் அவர்கள் சிங்கத்தை ஈட்டியால் தாக்கியுள்ளனர். இதில் அந்த சிங்கம் உயிரிழந்தது. உயிரிழந்த சிங்கத்தின் வயது 19 என்றும் கென்யாவின் வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது எ்னறு கூறப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் 10 சிங்கங்கள் உயிரிழப்பு 

இதுகுறித்து கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பாளர் பவுலா பேசும் போது, இது மனித வனவிலங்கு மோதலின் விளைவாகும்.

சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கென்யாவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லப்பட்ட சிங்கங்கள் அனைத்தும் ஊருக்குள் உணவை தேடும் முயற்சியில் சென்ற போது கிராம மக்களால் கொல்லப்பட்டதாக கென்யாவின் வனத்துறை தெரிவித்துள்ளது.