மிக்ஜாம் புயல்: நடிகர் சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி
சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயலுக்கு இதுவரையிலும் ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் சேதமடைந்துள்ளது.
மழை குறைந்தாலும் சென்னையின் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருப்பதால், மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு விரைவில் படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.