மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் - பின்னணி!

Lionel Messi Football Hyderabad
By Sumathi Dec 11, 2025 04:36 PM GMT
Report

மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி

கால்பந்து விளையாட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி(38). 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில்,

messi

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டத்தை வென்றும் சாதனை படைத்தது. இந்நிலையில் மெஸ்ஸி இந்தியாவில் வருகைத் தருவதுடன் ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், மும்பை மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது டிசம்பர் 13 ஆம் தேதில் உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மாலை 7 மணியளவில் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக 'தி கோட் டூர்' ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி அறிவித்துள்ளார்.

திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி

திடீரென ஓய்வை அறிவித்தார் ஜான் சீனா - ரசிகர்கள் அதிர்ச்சி

10 லட்சம் கட்டணம் 

மேலும் இந்நிகழ்ச்சியின் போது மெஸ்ஸியுடன் இணைந்து புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பார்வதி ரெட்டி, "ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் "மெஸ்ஸியுடன் சந்திப்பு மற்றும் வாழ்த்து" நிகழ்வில் கால்பந்து ரசிகர்கள் மெஸ்ஸியைச் சந்திக்க முடியும்.

இந்த நிகழ்ச்சியின் போது மெஸ்ஸியுடன் புகைப்படம் எடுக்க 100 நபர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (+ஜிஎஸ்டி) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சிகான டிக்கெட்டுகள் டிஸ்ட்ரிக்ட் செயலியில் கிடைக்கும். டிக்கெட்டின் ஆரம்ப விலையானது ரூ.1,250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் மற்ற நகரங்களில் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விலையானது ரூ.4,500 ஆகவும், மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு மாட்டும் ரூ.8,250ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.